உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ--நாம் செயலியை பயன்படுத்தி வருமானம் பெற அழைப்பு

இ--நாம் செயலியை பயன்படுத்தி வருமானம் பெற அழைப்பு

கோவில்பாளையம்: 'இ--நாம்' செயலியை பயன்படுத்தி, விளைபொருளுக்கு நல்ல விலை பெறலாம்,' என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண்துறை சார்பில், 'அட்மா' திட்டத்தின் கீழ், வெள்ளமடையில் ஒழுங்குமுறை விற்பனை மற்றும் 'இ- நாம்' குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண் அலுவலர் வெங்கடேஷ் பேசுகையில், திரவ வடிவ உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை மானியத்தில் வழங்கப்படுகிறது, என்றார். வேளாண் உதவி அலுவலர் (வணிகம்) வினோத்குமார் பேசுகையில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இடைத்தரகர் இல்லாமல், கமிஷன் தராமல் நியாயமான விலையில் விற்க ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படுகின்றன. தேசிய அளவில் விளை பொருட்களை விற்பனை செய்ய 'இ நாம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, என்றார்.ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ஷாஜிதா பேசுகையில், விவசாய விளைபொருட்களுக்கு மின்னணு முறையில் மறைமுக ஏலம் நடைபெறுவதால், நூறு சதவீதம் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்கள் மொபைலில் 'இ நாம்' செயலியை பதிவிறக்கம் செய்து தேசிய அளவில் அனைத்து பகுதிகளிலும் விளை பொருட்கள் விலையை தெரிந்து கொள்ளலாம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். என்றார்.வேளாண் உதவி அலுவலர் பாண்டிச்செல்வி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரண்யா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ