உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ராமருக்கு கும்பாபிஷேகம் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு

ஸ்ரீ ராமருக்கு கும்பாபிஷேகம் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு

கோவை;ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் நிர்வாகிகள், கோவை மாநகரில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு, அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.கோவை செல்வபுரம் திருநகரில் வசித்து வரும் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனனை, நேற்று சந்தித்த டிரஸ்ட் நிர்வாகிகள், ஸ்ரீ ராமர் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க கோரி, அழைப்பிதழையும், அட்சதை பிரசாதத்தையும் வழங்கினர். இது குறித்து, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் நிர்வாகிகள் கூறுகையில், 'ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். 'அதற்காக கோவையிலுள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை