மேலும் செய்திகள்
ஐவர் கால்பந்து போட்டி; கோவை அணிக்கு கோப்பை
28-Aug-2025
கோவை; 'இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன்' (ஐ.பி.ஏ.ஏ.,) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. இயந்திரவியல் துறை தலைவர் மோகன் சிவகுமார், போட்டியை துவக்கி வைத்தார். ஆறு அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப் போட்டியில், பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணியும் மோதின. நிறைவில், 3-1 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் அணி முதலிடம் பிடித்தது. ராமகிருஷ்ணா கல்லுாரி அணி இரண்டாமிடம் பிடித்தது. மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டிகளில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணிகள் மோதின. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அணி, 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாமிடம், ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் அணி நான்காமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை, முன்னாள் இந்திய கூடைப்பந்து விளையாட்டு வீரரும், தற்போதைய இந்தியன் நேவி கூடைப்பந்து அணியின் பயிற்சியாளருமான சாய் வெங்கடேஷ் வழங்கினார். முன்னதாக நடந்த இறகுப்பந்து போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை, முன்னாள் இந்திய கூடைப்பந்து விளையாட்டு வீரரும், தற்போதைய இந்தியன் ஆர்மி கூடைப்பந்து அணியின் பயிற்சியாளருமான, சுபேதார் சட்பால் சிங் வழங்கினார்.
28-Aug-2025