உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு ஊழியர் வீடுகளுக்கே இந்த நிலையா.. போராட்டத்தை தடுக்க இறங்கி வந்த அதிகாரிகள்

அரசு ஊழியர் வீடுகளுக்கே இந்த நிலையா.. போராட்டத்தை தடுக்க இறங்கி வந்த அதிகாரிகள்

கோவை; கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கழிவுநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.கவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 1,848 வீடுகள் உள்ளன. அரசு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இக்குடியிருப்பானது, எட்டு 'பிளாக்'குகளை கொண்டுள்ளது.இக்குடியிருப்பு வளாகத்தில் ரோடு மோசம், கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறுதல், குடிநீர் வினியோகம் குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பதாக, குடியிருப்புவாசிகள் குமுறுகின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர்.ஆனால், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, வீட்டுவசதி வாரிய வளாகத்தில் குப்பை கொட்டும் இடம் அருகே, உயர் அதிகாரிகள் வரும் வரை, காத்திருக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்து, நேற்று முன்தினம் மாலை தயாராக இருந்தனர்.தகவல் அறிந்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி