மேலும் செய்திகள்
கரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
15-Apr-2025
சூலுார்: சூலுாரில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., வில் இணைந்த தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., மற்றும் 152 பூத் கமிட்டி சார்பில், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய துணைத்தலைவர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். கிளை கமிட்டி தலைவர் பிரகாஷ் கொடியேற்றினார். அம்பேத்கரின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அவர் நாட்டுக்காக ஆற்றிய பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து விவரிக்கப்பட்டது. முன்னாள் ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய தலைவர் விக்னேஷ் பிரபு, பிரசாந்த், ஆடிட்டர் வெங்கட்ராமன், பூங்கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணன், செந்தில்குமார், நாகராஜ் ஆகியோர் பா.ஜ., வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. இதேபோல், சூலுார் புது பஸ் ஸ்டாண்டில், இந்து முன்னணி சார்பில், மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
15-Apr-2025