உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிகமாக பிள் ளையார் சிலை வைக்க அனுமதியில்லை

அதிகமாக பிள் ளையார் சிலை வைக்க அனுமதியில்லை

கோவை; இந்தாண்டு நாடு முழுவதும், வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் வீடுகளில், விநாயகர் சிலைகள் வழிபாடு நடத்தப்படும். இதுதவிர, இந்து அமைப்புகள் சார்பிலும், பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைத்து, வழிபாடு நடத்தப்படும். இதற்காக, விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பல்வேறு போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த ஆண்டுகளில் சிலைகள் அமைக்கப்பட்ட இடங்கள், அவற்றில் ஏற்பட்ட பிரச்னைகள், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கடந்தாண்டு, 712 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. இந்தாண்டு அதுபோல் நிகழாமல் இருக்க, அவ்விடங்களில் சிலைகள் வைக்க அனுமதிப்பதில்லை என, முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை தவிர, இந்தாண்டு கூடுதல் சிலைகள் வைக்க அனுமதி வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !