நிறைய கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது வெற்றியாளர்கள் உற்சாகம்
தீபேந்திரா மற்றும் சத்தியமூர்த்தி, ரத்தினபுரி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி:சமீபத்தில் வெளியான பட்டம் நாளிதழ்களில் முக்கியமான அனைத்து தகவல்களையும் குறிப்பெடுத்து தயார்படுத்திக்கொண்டோம். இறுதிப்போட்டிக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து படித்தோம். இந்த மூன்று நாட்களிலேயே பல தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. இனிமேல், தொடர்ந்து படிக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். முதல் பரிசு பெறுவோம் என நினைக்கவில்லை. இது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உள்ளது. பள்ளி ஆசிரியர்கள் போட்டிக்கு தயாராக வழிகாட்டினர். முகமது ஆஷிப் மற்றும் பிரதீப் , மாநகராட்சி பள்ளி வடகோவை: பட்டம் படித்ததால் புது புது விஷயங்களை தெரிந்துகொண்டோம். படிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறது. முதல் எட்டு அணிகளுக்குள் வருவோம் என எதிர் பார்க்கவில்லை. இதுபோன்ற போட்டிகள் புதிய தகவல்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை கொடுக்கிறது. நாங்கள் கற்றுக்கொள்ளும் புதிய தகவல்கள் நம்பிக்கை தருகிறது. இனி தொடர்ந்து நாளிதழ்கள் வாசிக்கவேண்டும். அனைத்து துறை பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதை புரிந்துகொண்டோம்.பவித்ரா ஸ்ரீ மற்றும் ஜெனிலியா, மாநகராட்சி பள்ளி ராமசாமி நகர்: கடந்த இரண்டு மாதங்களாக பட்டம் நாளிதழ் தொடர்ந்து வாசித்தோம். இருவரும் சேர்ந்து திட்டமிட்டு எங்களை தயார்படுத்திக்கொண்டோம். ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டு பதில் கூறிக்கொள்வோம். பள்ளி ஆசிரியர்கள் பல முக்கிய தகவல்களை வழங்கி உதவினர். எங்களது வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது. இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை இந்நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.