உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுலா பயணியரை கவர்ந்த ஜெகரெண்டா மலர்கள்

சுற்றுலா பயணியரை கவர்ந்த ஜெகரெண்டா மலர்கள்

வால்பாறை, ; வால்பாறையில், சாலையை அலங்கரிக்கும் ஜெகரெண்டா மலர்கள் சுற்றுலா பயணியர் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன.வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக, இடை இடையே கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், வால்பாறையில் குளுகுளு சீசன் நிலவுகிறது. சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் அதிகாலை நேரத்தில் நிலவும் கடும் பனிமூட்டத்தை வெகுவாக கண்டு ரசிக்கின்றனர். அதே போல், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் வாட்டர்பால்ஸ் எஸ்டேட் செல்பி பாயின்ட், கவர்க்கல் வியூ பாயின்ட், நல்லமுடி காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் செல்கின்றனர்.இந்நிலையில், சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், பொள்ளாச்சி ரோட்டில் வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெகரெண்டா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை, சுற்றுலா பயணியர் போட்டோ எடுத்து செல்கின்றனர்.சுற்றுலா பயணியர் கூறுகையில், 'பசுமையாக காணப்படும் வால்பாறைக்கு ஆண்டுதோறும் வருகிறோம். இங்குள்ள நீரோடைகள், பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர் செடிகள் மனதை கவர்கின்றன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை