மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி ஆண்டு விழா
26-Mar-2025
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா
26-Mar-2025
கோவை: கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்றுக்கொடுக்கப்படுவதுடன், ஆண்டுதோறும் ஜப்பானிய கலை மற்றும் பண்பாட்டு விழாவும் நடத்தப்படுகிறது.நடப்பாண்டு, 'ஹனாமி' என்ற பெயரில் நடந்த விழாவில், ஜப்பான் நாட்டை சேர்ந்த தமோ கடகிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், ஜப்பானில் உள்ள உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.மாணவர்களுக்கு ஜப்பான் நாடு குறித்த வினாடி - வினா, போஸ்டர் வரைதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 'டாணாபட்டா' என்ற மூங்கில் மரத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் விருப்பங்களை, தாள்களில் எழுதி தொங்கவிடும் நிகழ்ச்சியும் நடந்தது.விழாவில் முதல்வர் சுதா மோகன்ராம், சர்வதேச உறவிற்கான டீன் கண்ணன் நரசிம்மன், உதவி இயக்குனர் அக்சயா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
26-Mar-2025
26-Mar-2025