இருளில் மூழ்கிய ஜீவா நகர்
அன்னுார்; அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில், ஜீவா நகரில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பஸ் ஸ்டாப்பில் இருந்து, ஒட்டர் பாளையம் செல்லும் பாதையில், இரண்டு தெரு விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை.இங்கே அதிக அளவில் வீடுகள், கடைகள், வழிபாட்டுத்தலம் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. விபத்து ஏற்படுகிறது. 'விரைவில் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.