நகை திருட்டு; பெயிண்டர் கைது
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே வேளாங்கண்ணி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த்ராஜ், 61. இவர் குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை சர்ச்சுக்கு சென்றார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் போலீசார், அருகில் உள்ள சி.சி.டி.வி.,கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டது கேரளாவை சேர்ந்த முகமது பசீர், 48, பெயிண்டர் என தெரியவந்தது. அவரை மேட்டுப்பாளையத்தில் வைத்து போலீசார் நேற்று கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.