உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நாளில் 5 இடங்களில் நகை, பணம் திருட்டு

ஒரே நாளில் 5 இடங்களில் நகை, பணம் திருட்டு

கோவை:கோவை அருகே கோவைப்புதுாரில் ஐந்து இடங்களில் நகை, பணம் கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை அருகே கோவைப்புதுார் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ், 75. கடந்த, 9ம் தேதி சாமுவேல்ராஜ் மனைவி நள்ளிரவில் எழுந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 10 சவரன் நகை, பணம் மாயமாகியிருந்தது.சாமுவேல் ராஜ் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, முகமூடி அணிந்த ஒருவர் வீட்டை சுற்றி வந்தது தெரிந்தது. சாமுவேல் ராஜ், குனியமுத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். அதே பகுதியில், அன்றிரவு மொத்தம் ஐந்து வீடுகளில் பணம், நகை திருட்டு நடந்துள்ளது. இதேபோல, பெரிய கடை வீதி, வைசியாள் வீதியில் உள்ள ஒரு நகைக்கடை ஷட்டரை உடைத்து, திருட முயற்சித்துள்ளனர். கடை உரிமையாளர் புகாரில், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை