உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நகை திருடியவர் கைது: 2 பவுன் பறிமுதல்

 நகை திருடியவர் கைது: 2 பவுன் பறிமுதல்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு லட்சுமி நகர் பகுதியில் நகை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கிணத்துக்கடவு, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் தெய்வானை, 34. இவரது வீட்டில் கடந்த அக்., மாதம் நகை திருட்டு போனது. இது குறித்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய நபரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று லட்சுமி நகர் பகுதியில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், தெய்வானை வீடு அருகே உள்ளவர்களிடம் விசாரித்த போது, சந்தேகத்திற்கு இடமாக அங்கு இருந்த நாராயணசாமி, 54, என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில் நகை திருடியது உறுதியானது. இதையடுத்து, அவரிடம் இருந்து, 2 பவுன் நகையை பறிமுதல் செய்து, நாராயணசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ