உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிபோதை வழக்கில் அபராதம் செலுத்த ஜே.எம்: 8 கோர்ட் வராண்டாவில் நெரிசல்

குடிபோதை வழக்கில் அபராதம் செலுத்த ஜே.எம்: 8 கோர்ட் வராண்டாவில் நெரிசல்

கோவை; கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது, போக்குவரத்து பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.சாலை விதிகள் மீறுவோர் மீது, மாநகர் மற்றும் புறநகரில் செயல்படும் மொபைல் கோர்ட் வாயிலாகவும், அபராதம் விதிக்கப்படுகிறது.குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை, நாள் தோறும் அதிகரித்து வருகிறது. வழக்கில் சிக்கியவர்கள், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாஜிஸ்திரேட் கட்டடத்தின், முதல் தளத்தில் செயல்படும் ஜே.எம்:8, கோர்ட்டில்ஆஜராகி அபராதம் செலுத்துகின்றனர்.தினந்தோறும், 200க்கு மேற்பட்டோர் கோர்ட்டில் ஆஜராகி வருவதால், கோர்ட் வரண்டாவில் நடக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது. அபராதம் செலுத்துவோர் காத்திருக்க தேவையான இடவசதி இல்லை.அலுவலக அறை, நீதிமன்ற அறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அறையில் ஒரு வாசல் மட்டுமே உள்ளது. இதனால் வராண்டா முழுவதும் கூட்டமாக இருப்பதால், மற்ற கோர்ட்களுக்கு ஆஜராக செல்வோர், நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், கோர்ட்டில் ஆஜராக முதல் தளத்தில் செல்லும் போது சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, இடநெருக்கடி இல்லாத கட்டடத்திற்கு ஜே.எம்:8, கோர்ட்டை மாற்ற வேண்டும் என்று, வக்கீல்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !