உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விரைவில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை மீண்டும் திரும்பும்

விரைவில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை மீண்டும் திரும்பும்

கோவை; ''விரைவில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை மீண்டும் திரும்பும்,'' என, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாஸ்கர் பேசினார்.சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை அமைப்பு(சி.வி.சி.,) சார்பில், 'முதியோர் வாழும் சமூகங்கள்; சவால்கள் மற்றும் வெற்றிகள்' எனும் தலைப்பில், கலந்தாய்வுக்கூட்டம் திருச்சி ரோட்டில் உள்ள, தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது.கூட்டத்தில், கோவையில் பதிவு செய்த முதியோர் காப்பகங்கள், கோவை மாநகராட்சி முதியோர் காப்பகங்களில் தங்கியுள்ள முதியோர்களிடம் நிர்வாகம், எப்படி நடந்து கொள்கிறது, செய்யும் வசதிகள் என்ன, முதியோர் எதிர் கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாஸ்கர் பேசுகையில்,''நமது நாட்டில், முதியவர்கள் எண்ணிக்கை அதிகம். இளைஞர்கள் முதியவர்களுடன் அமர்ந்து பேசும் காலம் வெகுதொலைவில் இல்லை. விரைவில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை மீண்டும் திரும்பும்.இன்றைய இளைஞர்களுக்கு, முதியவர்களின் முக்கியத்துவம் தெரிந்துள்ளது. ஏராளமான சட்டங்கள் முதியவர்களுக்கு சாதகமாக உள்ளன.முதியவர்களும் சில விசயங்களுக்கு, வளைந்து கொடுக்க வேண்டும். இளைஞர்களின் மனதில் நல்லவற்றை விதைக்கும் போது அது, தனிமனிதன் மட்டுமின்றி சமுதாய வளர்ச்சிக்கும் உதவும்,'' என்றார்.சி.வி.சி., தலைவர் ஜெயராமன், கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார், சென்னை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் செயலாளர் மலைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை