உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்; மாவட்ட அணிக்கு நாளை தேர்வு

ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்; மாவட்ட அணிக்கு நாளை தேர்வு

கோவை; திண்டுக்கல் மாவட்டத்தில், மாநில அளவில் வீராங்கனைகளுக்கான ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வரும், 18 முதல், 21ம் தேதி வரை நடக்கிறது.இதற்கென, கோவை மாவட்ட அணிக்கான தேர்வு, சுங்கம் பைபாஸ் ரோடு அருகே பிஷப் அம்புரோஸ் கல்லுாரி கால்பந்து மைதானத்தில், நாளை காலை, 7:30 மணிக்கு நடக்கிறது. கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், விளையாட்டு திறமை அடிப்படையில் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். கோவை முகவரி உள்ள ஆதார் அட்டை, பள்ளி சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். மாணவியர் 2010ம் ஆண்டு ஜன.,1 முதல், 2011ம் ஆண்டு டிச., 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 97505 44433, 98657 35657, 99449 77009 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கால்பந்து சங்க செயலாளர் அனில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை