உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீராம் நகரில் களிமண்தான் ரோடு; மக்கள் பெரும்பாடு புகார் செய்தும் கண்டுக்காத பேரூராட்சியால் தொடருது அவதி

ஸ்ரீராம் நகரில் களிமண்தான் ரோடு; மக்கள் பெரும்பாடு புகார் செய்தும் கண்டுக்காத பேரூராட்சியால் தொடருது அவதி

வளர்ச்சி பணிகள் நடக்கல

கோவை ஒண்டிப்புதுார் கிழக்கு வீதி, கம்பன் நகர் பகுதியில் சாலைகள், கடந்த 25 ஆண்டுகளாக போடப்படவில்லை. வளர்ச்சி பணிகளின் கீழ், சாலைகள் அமைத்து கொடுக்கவில்லை. பல முறை அதிகாரிகளை அணுகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.- ராஜேஷ், ஒண்டிப்புதுார்.

கொசுக்கள் தொல்லை

கோவை தெலுங்குபாளையம் கே.பி.திருவேங்கடம் நகர் பகுதியில், கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதால், நோய் அபாயம் எழுந்துள்ளது.- கல்யாண், தெலுங்கு வீதி

விபத்து அபாயம்

கோவை, வார்டு எண் 85 சுப்பராய முதலியார் வீதியில், சாக்கடை சுத்தம் செய்ய அகற்றப்பட்ட பகுதி, சீரமைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இக்குழியில் குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. ஒரு மாதமாக திறந்த நிலையில், கழிவுநீர் பள்ளம் உள்ளது. உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை.- முத்துக்குமார், சுப்ராய முதலியார் வீதி.

வீட்டுக்குள் செல்ல முடியல

பெரியநாயக்கன்பாளையம், நம்பர் 4 வீரபாண்டி ஸ்ரீ ராம் நகர் பகுதி முழுவதும், சாலை வசதி இல்லை. களிமண் ரோடு என்பதால், வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. வாகனங்களை ஒரு கி.மீ., தொலைவில் நிறுத்திவிட்டு, சிரமத்துடன் நடந்து செல்கிறோம். மழை பெய்தால் தனி தீவாக மாறிவிடுகிறது. பேரூராட்சியில் பல முறை கூறியும் கண்டுகொள்ளவில்லை.- சிவராம், ஸ்ரீராம் நகர்.

மெயின் ரோட்டில் மாடுகள்

திருச்சி ரோடு, அல்வேர்னியா பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், மெயின் சாலையில் வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதுடன். பிள்ளைகள் நடந்து செல்ல அச்சம் ஏற்பட்டுள்ளது.- லட்சுமி, டவுன்ஹால்.

துாய்மை என்ன விலை

சிங்காநல்லுார் அரவான் கோவில் ரேஷன் கடை அருகே, சாக்கடை குப்பை மற்றும் உடைத்திருக்கும் பாட்டில்கள் சுத்தம் செய்யாமல், பல நாட்களாக உள்ளன. கடைக்கு செல்ல முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறது. இதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குருகார்த்திக், சிங்காநல்லுார்.

சுகாதார சீர்கேடு

காந்திபுரம் 8வது வீதி, 62வது வார்டு பகுதியில், கழிவு நீர் சாக்கடை ஸ்லேப் நீக்க சுத்தம் செய்து, ஓராண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதனை மூடாமல் விட்டுவிட்டனர். தற்போது, இந்த இடத்தில் குப்பை கொட்டி, கழிவுநீர் திட்டுகளும் கரைந்து வெளியேறி வருகிறது. ஆங்காங்கே சாக்கடை அடைத்து விடுவதால், துர்நாற்றம் எழுகிறது. சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.-சீனிவாசன், காந்திபுரம்

பயனற்ற வேலை

வார்டு எண், 44 ஜானகி நகர் பகுதியில், சாக்கடையில் அடைத்த மண் துார்வாரப்பட்டது. அந்த மண்ணை சாக்கடை அருகிலேயே கொட்டி சென்றுள்ளனர். ஒரு மழை பெய்தால் மீண்டும் மண் அனைத்தும் சாக்கடையில் தான் சேரும். உடனடியாக அகற்றவேண்டும்; இல்லையேல் இது பயனற்ற வேலையாக ஆகிவிடும்.- ஆதினி, ஜானகிநகர்.

தெரு விளக்கு எரிவதில்லை

சரவணம்பட்டி முருகன்நகர் பகுதி அன்பு நகரில், கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்கு எரிவதில்லை. தெருவிளக்கை அணைக்க சுவிட்ச்சுக்கு பதிலாக, பீஸ் கட்டை கொடுத்து இருப்பதால், அதை எடுத்து அணைப்பதில் சிரமங்கள் உள்ளன. இதனை சரி செய்து, தெரு விளக்கு எரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.- சவுந்தரராஜன், சரவணம்பட்டி.

பயன்பாட்டு அனுமதி எப்போது ?

கோவைபுதுார் வார்டு 90, ஏ கிரவுண்ட் அருகில் கழிப்பறை கட்டி முடித்து, இரண்டு மாதம் ஆகிறது. இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கவில்லை. மழை நேரங்களில் கழிவறை இன்றி, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். புதிய கழிவறையை சுற்றிலும், புற்கள் முளைக்க துவங்கிவிட்டது.- பாலாஜி , கோவை புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி