உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லாறு -- பர்லியார் மலையேற்றம்; 15ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்

கல்லாறு -- பர்லியார் மலையேற்றம்; 15ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்

மேட்டுப்பாளையம்; காட்டுத்தீ அபாயம் காரணமாக கல்லாறு-- பர்லியார் இடையே மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், வரும் 15ம் தேதி முதல் மீண்டும் துவங்குகிறது. மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு - பர்லியார் இடையே 3.5 கி.மீ., துாரம் அடர் வனப்பகுதியில், சுற்றுலா பயணிகள் மலையேற்றம் மேற்கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி திட்டம் துவங்கியது. இதுவரை 450க்கும் மேற்பட்டோர் மலையேற்றம் பயணம் செய்துள்ளனர்.இதனிடையே கடும் வெயில் நிலவி வந்ததால், வனத்தில் காட்டுத்தீ விபத்து அபாயம் நிலவியது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 2 வது வாரத்திற்கு மேல் மலையேற்றம் சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''கோடை வெயில், வனவிலங்குகள் இடப்பெயர்ச்சி காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 2வது வாரம் முதல் மலையேற்றம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. தற்போது கோடை மழை நன்கு பெய்துள்ளது. இதையடுத்து வரும் 15ம் தேதியில் இருந்து மீண்டும் மலையேற்றம் திட்டம் துவங்கும். இணையத்தில் பதிவு செய்து தான் வரவேண்டும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ