மேலும் செய்திகள்
நல்லாசிரியர்களுக்கு பாராட்டு
10-Sep-2025
வால்பாறை; பொள்ளாச்சியில் நடந்த விழாவில் வால்பாறையை சேர்ந்த கணித ஆசிரியருக்கு, கல்விச்செம்மல் விருது வழங்கப்பட்டது. உலக ஆசிரியர் தின விழாவையொட்டி, தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கல்விச்செம்மல் விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் நடந்தது. பொள்ளாச்சி மசானிக் சேவை அமைப்பு, ஸ்ரீராகவேந்திரா மக்கள் இயக்கம், இந்திய அரசு நேருயுவகேந்திரா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய விழா, லயன்ஸ் கிளப் வளாகத்தில் நடந்தது. விழாவில் மசானிக் சேவை அமைப்பின் தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 27 ஆண்டுகளாக கணித ஆசிரியராக பணிபுரியும் வசந்தகுமாரின் கல்வி சேவையை பாராட்டி, அவருக்கு பொள்ளாச்சி இருதய நோய் சிறப்பு மருத்துவர் ராமகிருஷ்ணன், கல்விச் செம்மல் விருது வழங்கி பாராட்டினார். விழாவில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும், 20 ஆசிரியர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி விருது வழங்கப் பட்டது. விழாவில் செந்தில் ராகவேந்திரா நன்றி கூறினார்.
10-Sep-2025