கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆழ்வார்கள் பிரதிஷ்டை விழா
அன்னுார்; அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஆழ்வார்கள் பிரதிஷ்டை விழா வரும் 2ம் தேதி நடக்கிறது.அன்னுாரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில் 12 ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா வருகிற 1ம் தேதி துவங்குகிறது. மாலையில் திருமஞ்சனம், யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், எண் வகை மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.பிப்., 2ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் ஆழ்வார்கள் பிரதிஷ்டை, யாத்திரா தானம் நடக்கிறது. காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் ஆழ்வார்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.