உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலெக்டரிடம் கரியாம்பாளையம் மக்கள் சரமாரி புகார்

கலெக்டரிடம் கரியாம்பாளையம் மக்கள் சரமாரி புகார்

அன்னுார்; அன்னுார் தாலுகா அலுவலகத்தில், நேற்று கோவை கலெக்டர் பவன் குமார் ஆய்வு செய்தார்.அப்போது அவரிடம், கரியாம்பாளையம் கிராம மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், 'இங்கு நான்கு ஆண்டுகளாக செயல்படும் தனியார் நிறுவனத்திலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மூச்சு விட முடியவில்லை. நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது; வாந்தி வருகிறது.கால்நடைகள் நோய்வாய்ப்பட்டுள்ளன. இதுகுறித்து பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை இல்லை.10 நாட்களுக்கு முன்பு உங்களிடமும் கரியாம்பாளையத்தில் மனு கொடுத்தோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை,' என சரமாரியாக புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வருவாய் துறையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்பின்னர் ஊராட்சி ஒன்றிய தெற்கு துவக்கப்பள்ளியில் மாணவர்களிடம் கேள்வி கேட்டார். மாணவர்களுக்கு கணக்கு பாடம் கற்பித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் குப்பை கூளங்கள், பழைய பொருட்கள் கிடந்தன. 'ஏன் இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளீர்கள். பழைய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்,' என கலெக்டர் அறிவுறுத்தினார்.ஆய்வில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை