மேலும் செய்திகள்
கவுசிகா நதி பள்ளத்தில் குவியும் குப்பை
13-Nov-2025
கோவில்பாளையம்: கவுசிகா நதி பாதையில் உள்ள, சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில், ஒரே நேரத்தில் 92 பொக்லைன் இயந்திரங்கள் நேற்று பயன்படுத்தப்பட்டன. இதனால் தடை அகன்று, குளங்களை மழை நீர் எளிதில் சென்றடையும். பெரியநாயக்கன்பாளையம் அருகே குருடி மலையில் துவங்கும் கவுசிகா நதி, எஸ்.எஸ்.குளம், அன்னூர், சூலூர் ஒன்றியங்கள் வழியாக, மழைக்காலத்தில் மட்டுமே செல்கிறது. ஆண்டு முழுவதும் இந்த வழித்தடத்தில் கவுசிகா நதி செல்வதற்காக, கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு பணியாற்றி வருகிறது. நேற்று வையம்பாளையம், சுதந்திரா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி துவக்க விழா நடந்தது. வையம்பாளையம், அத்திப்பாளையம், இடிகரை பகுதியில் 5 கி.மீ., தொலைவிற்கு, கவுசிகா நதி செல்லும் பாதையில் உள்ள சீமை கருவேல மரங்கள், புதர், குப்பை அகற்றும் பணி துவக்கி வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், 92 பொக்லைன் இயந்திரங்கள் இலவசமாக இப்பணியில் ஈடுபட்டன. துவக்க விழாவில், எர்த் மூவர்ஸ் சங்க தலைவர் சந்திரசேகர், செயலாளர் சசிகுமார், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'ஆண்டுக்கு ஒரு நாள் 100 பொக்லைன் இயந்திரங்கள், இலவசமாக குளம் சீரமைப்பு பணியில் ஈடுபடும்' என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இன்ப்ரா தலைவர் சதீஷ்குமார், சமுதாயப் பணிகள் பிரிவு தலைவர் மயில்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி பேசுகையில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், மழை நீர் வரும் பாதையை சீரமைக்கும் பணிக்கு, முழு ஒத்துழைப்பு தரப்படும், என் றார். ஏற்கனவே ஆறு கி.மீ., தூரத்துக்கு, புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஒரே நாளில் 92 பொக்லைன் இயந்திரங்கள் 5 கி.மீ., தூரத்திற்கு சீமை கருவேல மரங்களை அகற்றுகின்றன. இதனால் மழைநீர் தடை ஏதுமின்றி, இந்த வழித்தடத்தில் உள்ள குளங்களுக்கு செல்லும். குளத்தில் தண்ணீர் தேங்கும். சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். - செல்வராஜ் தலைவர், கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு
13-Nov-2025