பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கேரளாவை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, அர்த்தநாரிபாளையம் கிராமத்தில் உள்ள பெருமாள்சுவாமி மலைக்கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஒரு பெண்ணுடன், ஆண் ஒருவரும் இறந்து கிடப்பதாக, ஆழியாறு போலீசாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் சடலத்தையும் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். போலீசார் கூறியதாவது: இறந்தவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த டிரைவிங் லைசென்சை கைப்பற்றி விசாரித்த போது, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 48, அதே பகுதியை சேர்ந்த சென்சி, 37, என்பது தெரியவந்தது.கணவனை இழந்த சென்சிக்கும், ராஜேந்திரனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் இருவரின் குடும்பத்துக்கும் தெரிந்ததால், இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.இருசக்கர வாகனத்தில், அர்த்தநாரிபாளையம் மலைக்கோவிலுக்கு வந்து, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம். இவ்வாறு, கூறினர்.