கேரளா தமிழ் பேரவை மாவட்ட மாநாடு
பொள்ளாச்சி; கேரள மாநிலம், பாலக்காட்டில் நேற்று கேரளா தமிழ் பேரவை அமைப்பின் மாவட்ட மாநாடு நடந்தது.மாநாட்டை மொழி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ் பங்கேற்றார். அமைப்பின் பொருளாளர் சடகோபாலன் தலைமை வகித்தார். கேரளாவில் உள்ள மொழிச் சிறுபான்மை சமுதாயத்திற்கு இதுவரை கிடைத்து வந்த சலுகைகளும், உரிமைகளும் பாதுகாக்கப்படும். உடனடி தலையீடு தேவைப்படும் பிரச்னைகள் குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உறுதி அளித்தார்.சிறுபான்மை சமூகங்களின் அரசியலமைப்பு உரிமைகள் குறித்து, முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் ஜோன் பேசினார். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முரளி, செயலாளர் முத்துக்குமார், கேரளா தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் பேச்சிமுத்து, பாதிரியார் ஆல்பர்ட் ஆனந்தராஜ், கேரள மாநில பிராமண சபை தலைவர் கரிம்புழை ராமன், ராவுத்தர் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் அசன் முகமது உட்பட, 20 மொழி சிறுபான்மை சமுதாய தலைவர்கள் பேசினர்.