உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழலையர் பள்ளி ஆண்டு விழா

மழலையர் பள்ளி ஆண்டு விழா

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.விழாவில், பள்ளி தாளாளர் சித்ரா பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கே.ஆர்.மருத்துவமனை நிறுவனர் டாக்டர் திலகம் ராஜேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அன்னபூர்ணா குரூப் சீனிவாசன், அண்ணாமலை பங்கேற்றனர். விழாவை ஒட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சால்சர் நிறுவன இயக்குனர் துரைசாமி, பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், திரளான பள்ளி குழந்தைகளின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ