உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அரசின் திட்டங்களை தெரிஞ்சுக்குங்க! பயன்பெற மக்களுக்கு அறிவுரை

மத்திய அரசின் திட்டங்களை தெரிஞ்சுக்குங்க! பயன்பெற மக்களுக்கு அறிவுரை

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.கோவை மத்திய மக்கள் தொடர்பக அலுவலகம் சார்பில், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்றது.சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, விழாவை துவக்கி வைத்து பேசுகையில், ''மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும்.தபால் துறையின் திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். மத்திய அரசின், மதி இணையதள செயலி வாயிலாக, தொழில் முனைவோர் பயன் பெறலாம்,'' என்றார்.சிறப்பாக செயல்பட்டு வரும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அஞ்சல்துறை திட்டங்கள் குறித்து, கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினி பேகம் பேசினார். பிரதமரின் மக்கள் வங்கி திட்டம் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் விளக்கினார்.மத்திய தர நிர்ணய அமைவினத்தின் முக்கியத்துவம் குறித்து, விஞ்ஞானி ரினோஜான் விளக்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதிமணி, கற்பகம் கல்லுாரி பேராசிரியர் தர்மராஜ், மக்கள் மருந்தக ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர், மத்திய அரசு திட்டங்கள் குறித்து பேசினர்.மத்திய மக்கள் தொடர்பு அலுவலர் சந்திரசேகர், விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினார்.குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டன. குழந்தைகள் பாதுகாப்பு உத்திகளான கல்வி மற்றும் விழிப்புணர்வு, வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஆதரவு, தகவல் அளிப்பது, தற்காப்பு வழிமுறைகள், ஆலோசனை வழங்குவது, சிகிச்சை அளிப்பது, சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.பிரதமரின் வித்யாலட்சமி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தபால் அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து விளக்கப்பட்டது. அஞ்சல் துறை, மக்கள் மருந்தகம், சுய உதவிக்குழுவினர் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை