உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில் கோடி நாம அர்ச்சனை வைபவம் 

ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில் கோடி நாம அர்ச்சனை வைபவம் 

கோவை; ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் 100வது பிறந்த ஆண்டு வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீ சத்யசாயி கோடி நாம அர்ச்சனை வைபவம் நேற்று நடந்தது. கோவை ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் சாலையில் உள்ள ஸ்ரீ சத்யசாயி மந்திரில் நேற்று காலை 7 மணிக்கு ஸ்ரீ சத்யசாயி கோடி நாம அர்ச்சனை துவங்கியது. வேதவிற்பன்னர்கள் ஸ்ரீ சத்யசாயியின் திருநாமத்தைச் சொல்லி, கோடி நாம அர்ச்சனை செய்ய, தொடர்ந்து பக்தர்களும் பாராயணம் செய்தனர். காலை 7 மணிக்கு துவங்கிய பாராயணம் 9 மணி வரையும், அரை மணி நேர இடைவெளிக்குபின், மீண்டும் 9.30க்கு துவங்கி 12.30 வரையும், அதன் பின், 4.30க்கு துவங்கி, 5.30 மணி வரையும் கோடி நாம அர்ச்சனை நடந்தது. மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை சத்யசாய் குறித்து சத்ஸங்கமும், தொடர்ந்து சாய் பஜனை நடந்தது. இன்றும் தொடர்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி