உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச "லேப்-டாப்: பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்

இலவச "லேப்-டாப்: பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்

அன்னூர் : 'இலவச 'லேப்-டாப்', பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது' என, கோவை கலெக்டர் தெரிவித்தார். தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், அத்திப்பாளையம் உள்பட இரண்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அத்திப்பாளையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சித் தலைவர் சுபத்ரா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கோவை கலெக்டர் கருணாகரன் முன்னிலை வகித்து பேசியதாவது:இந்த ஊராட்சியில் 237 பேர் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்தனர். அரசு அறிவித்துள்ள தகுதிகளின்படி, அதில் 27 பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு அறிவித்துள்ள குழுவுடன் இணைந்து அருகில் உள்ள சந்தையில் ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம். ஒரு ஆட்டுக்கு 2,500 ரூபாய் வீதம் நான்கு ஆடுகளுக்கு 10 ஆயிரமும், கொட்டகை அமைக்க 2,000 என 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.அடுத்த கட்டமாக கறவை மாடு, மிக்சி, கிரைண்டர், தாலிக்கு தங்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக லேப்-டாப் வழங்க பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.இலவச ஆடுகள் பெறுவதற்கான பயனாளிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 14 பேருக்கு புதிய ரேஷன் கார்டும், 25 முதியோருக்கு ஓய்வூதியம் பெற உத்தரவும் வழங்கப்பட்டது. இலவச தொகுப்பு வீடு, பட்டா, வங்கி கடன் ஆகிய கோரிக்கைகளுக்காக மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி பேசினார். சிறப்பு திட்டங்களுக்கான துணை கலெக்டர் குணசேகரன், வடக்கு தாசில்தார் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ