உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டத்திலே முதல்முறையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பால்வினைநோய் மையம் திறப்பு

கோவை மாவட்டத்திலே முதல்முறையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பால்வினைநோய் மையம் திறப்பு

பேரூர் : 'கிராம மக்களிடம் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை கொண்டுசெல்ல வேண்டும்,'என, மாவட்டஎய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டுமைய திட்ட அலுவலர் கூறினார்.பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பால்வினை தொற்றுநோய் சிகிச்சை மைய திறப்பு விழா நடந்தது. சுகாதாரங்களின் துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசியதாவது:பால்வினைநோய் சிகிச்சை மையம், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய பகுதியிலுள்ள அரசு மருத்துமனையில் மட்டுமே,செயல்படுகிறது. தற்போது, மாவட்டத்திலே முதல்முறையாக, ஊரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்றுநோய் சிகிச்சைமையம் துவக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, தொழில்நகரமான கோவை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏராளமான வெளிமாநிலத்தவரும் கோவைக்கு வந்து செல்கின்றனர்.எனவே, அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப, சிகிச்சை மையங்களை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், பால்வினை நோய்களை ஆரம்பத்திலே கண்டுபிடித்து, பரவாத வகையில் கட்டுப்படுத்த முடியும். இந்த மையத்தில், கிராமப்புற மக்கள், பால்வினை நோய் குறித்த ஆலோசனை, பரிசோதனை, சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு, செந்தில்குமார் கூறினார்.மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு மைய திட்ட மேலாளர் முகமதுஅலி பேசுகையில்,''இங்கு, கர்ப்பிணி தாய்மார்கள் உள்பட அனைவரும் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். ''ஆண்களுக்கு, பிறப்புறுப்பில் புண், சீழ்வடிதல், மருக்கள், வலியுடன் கூடிய விரைவீக்கம், பெண்களுக்கு பிறப்புறப்பில் புண், துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைபடிதல், அடிவயிற்றுவலி உள்ளிட்ட பிரச்னைகள் பால்வினை நோய்களின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால், பால்வினைநோய் சிகிச்சை மையத்துக்கு வந்து பரிசோதனைகள் செய்து கொண்டு, சிகிச்சை பெறலாம்,''என்றார்.பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கனகராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை