கே.பி.ஆர்., கல்லுாரியில் விருட்சம் 2025
கோவை : கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'விருட்சம் 2025' என்ற பெயரில், 'என் கல்லுாரி, என் வளர்ச்சி' என்ற கருப்பொருளில் 16வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கே.பி.ஆர்., குழுமங்களின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.விப்ரோ நிறுவனத்தின் தேசிய பணியமர்த்துதல் தலைவர் ராதிகா சிறப்பு விருந்தினாராக பங்கேற்றார். கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, விருதுகள் வழங்கி கவுரவித்தார். முக்கிய அம்சமாக கல்லுாரியின், 'பிரொகிரெஸ்ஸிவ் கே.பி.ஆர்.,' என்ற ஆவணத் தொகுப்பு வெளியிடப்பட்டது. கல்லுாரியின் செயலர் காயத்ரி, முதல்வர் சரவணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.