உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிருஷ்ண ஜெயந்தி; கோவில்களில் கோலாகலம்

கிருஷ்ண ஜெயந்தி; கோவில்களில் கோலாகலம்

- நிருபர் குழு -பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா வரும், 16ம் தேதி நடக்கிறது. பொள்ளாச்சி எஸ்.எஸ்.கோவில் வீதி விஷ்ணுபஜனை கோவிலில், கோகுலாஷ்டமி உறியடி உற்சவ விழா வரும், 16ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, ேஹாமம், அபிேஷக ஆராதனை, மாலை, 5:00 மணிக்கு பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை, இரவு, 7:00 மணிக்கு உறியடி உற்சவம் நடக்கிறது. * குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 16ம் தேதி காலை, 7:00 மணிக்கு சிறப்பு அஷ்டாபிேஷகம், 9:00 மணிக்கு 108 கோ பூஜை, மஹா தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு விஷ்ணு பஜனை கோவில் குழுவினரின் திருப்பல்லாண்டு, திருப்பாவை பாராயணம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு உறியடி விழா, ஹரிகந்த ஸ்ருதி பஜனை குழுவினரின் சிறப்பு பஜனை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சாயரட்சை மஹா தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 9:00 மணிக்கு ஹரிவராசனம், நடை சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. * ஆனைமலை கிருஷ்ண ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவலம்புரி சித்தி, புத்தி விநாயகர், ராகு,கேது, சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், தன்வந்திரி, தசாவதார கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வரும், 16ம் தேதி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு அன்னவாகனத்தில் வீதி உலா, 6:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, அலங்காரம், இரவு, 7:45 மணிக்கு தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு கீதையின் கண்ணன் என்ற தலைப்பில், பூஜ்யஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகளின் சொற்பொழிவு நடக்கிறது. *உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோட்டமங்கலம் நேஷனல் மாடல் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார். மாணவர்கள் கிருஷ்ணன், ராதையாக வேடமிட்டு, நடனமாடினர். பள்ளி ஆசிரியர்கள், பார்வையாளர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி