கிருஷ்ணர் பல்லக்கு ஊர்வலம்
அன்னுார்: அன்னுாரில் நாளை கிருஷ்ணர் பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. கோவை இஸ்கான் இயக்கம் சார்பில், உலக ஹரி நாம விழா மூன்றாவது ஆண்டாக, அன்னுாரில் நாளை மாலை 5:00 மணிக்கு, அன்னுார் ஓதிமலை பாதையில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து, கிருஷ்ணர் பல்லக்கு ஊர்வலம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் பஜனை உடன் புறப்படுகிறது. முக்கிய வீதிகள் வழியாக சென்று, இரவு மீண்டும் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் முடிவடைகிறது. இஸ்கான் இயக்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஊர்வலத்தில் பங்கேற்று ஹரி நாமம் பாடுவோம் என, நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.