முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை
சூலுார் : கிருத்திகையை ஒட்டி சூலுார் வட்டார முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஐப்பசி மாத கிருத்திகையை ஒட்டி, சூலுார் வட்டாரத்தில் உள்ள பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர், கண்ணம் பாளையம் பழனியாண்டவர் கோவில், காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில்,விராலிக்காடு சென்னியாண்டவர், சூலுார் பழனியாண்டவர் கோவில்களில் முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.