உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொலையாளிகள் கைது: போலீசாருக்கு பாராட்டு

கொலையாளிகள் கைது: போலீசாருக்கு பாராட்டு

கோவை;ஆதாய கொலை குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார்.கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த, 40 வயது பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்து, 8 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகள் சந்திர ஜோதி, 41 மற்றும் சுரேஷ், 39 ஆகிய இருவரை கைது செய்தனர்.குற்றவாளிகளை விரைந்து கைது செய்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ.,க்கள் இரண்டு பேர், தலைமை காவலர்கள், 3, முதல் நிலைக் காவலர்கள், 3 மற்றும் போலீசார், 6 பேர் என, 17 பேரை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன்,மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !