உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.எஸ்., அலும்னி கோப்பை கூடைப்பந்தில் குமரகுரு முதலிடம்

எஸ்.என்.எஸ்., அலும்னி கோப்பை கூடைப்பந்தில் குமரகுரு முதலிடம்

கோவை:எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியின் அலும்னி கோப்பை கூடைப்பந்து போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது. எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், நான்காம் ஆண்டு 'எஸ்.என்.எஸ்., அலும்னி கோப்பைக்கான' பூப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், மாணவ மாணவியருக்கு பூப்பந்து போட்டி மற்றும் மாணவர் பிரிவு கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. பூப்பந்து போட்டியின் மாணவர் பிரிவில், 17 அணிகளும், மாணவியர் பிரிவில் எட்டு அணிகளும் பங்கேற்றன. கூடைப்பந்து போட்டியில் 11 அணிகள் பங்கேற்றன. போட்டியை, கல்லுாரி முதல்வர் செந்துாரபாண்டியன் துவக்கி வைத்தார். கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் தினகரன் உடனிருந்தார்.இதன் கூடைப்பந்து இறுதிப்போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணியும், ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி அணியும் மோதின. இப்போட்டியில், குமரகுரு மாணவர்கள் கிடைத்த வாய்ப்புகளை புள்ளிகளாக மாற்ற, அந்த அணி ஆட்ட நேர முடிவில், 45 - 30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது. மூன்றாமிடத்துக்கான போட்டியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணி 35 - 19 என்ற புள்ளிக்கணக்கில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ