மேலும் செய்திகள்
ரயில்வே கேட் மூடல்
07-Jun-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி குமரன் நகர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டதால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, குமரன் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொள்ளாச்சி நகரப்பகுதிக்கு வந்து செல்லும் ரோட்டில், பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில் பாதை குறுக்கிடுகிறது. இங்கு ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, நேற்று காலை, 10:00 மணி முதல் நாளை (6ம் தேதி) இரவு, 10:00 மணி வரை மூடப்பட்டுள்ளது. அவ்வழியாக, வாகனங்களில் வருவோர் கவனத்துக்காக, அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. கேட் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.பராமரிப்பு பணிக்காக, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, வடுகபாளையம் - சி.டி.சி., மேடு வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பொள்ளாச்சிக்கு வர மாற்று வழித்தடத்தை பயன்படுத்தினர்.
07-Jun-2025