பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி செல்லமுத்து நகர் செல்வவிநாயகர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷக விழா வரும், 13ம் தேதி மங்கள இசை, கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது.அன்று காலை, 11:15 மணிக்கு திரவியாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனையும், மாலையில், முளைப்பாலிகை, தீர்த்த கலசம் அமைத்தல், புதிய உற்சவர் நகர்வலம் புறப்படுத்தல் நடக்கிறது.இரவு, முதற்கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது.வரும், 14ம் தேதி காலை, விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாகம், மாலையில் மூன்றாம் கால யாகம், வேதசிவகாம திருமுறை விண்ணப்பம், கணபதி பஞ்ச முகார்ச்சனை நடக்கிறது. இரவு, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.வரும், 15ம் தேதி காலை, 7:35 மணிக்கு நான்காம் கால யாகம், நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:15 மணிக்கு செல்வவிநாயகர் மூலாலய விமான கோபுர கும்பாபிேஷகம், காலை, 9:30 மணிக்கு செல்வவிநாயகர் மூலாலய கும்பாபிேஷகம், மஹா அபிேஷகம், கோ பூஜை, மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. காலை, 11:00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது.