உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மன்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

மன்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

அன்னுார்; அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஏழாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2018ம் ஆண்டு நடந்தது. கும்பாபிஷேக ஏழாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது.காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கலச ஆவாகனம், ருத்ர ஜெப பாராயணம், மூல மந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் நடந்தது. மதியம் மன்னீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.திருமுருகன் அருள்நெறி கழகத்தினர், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.அன்னுார், பிப். 17---கோவை சத்தி புறவழிச் சாலை எதிர்ப்பு குழு சார்பில், கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் அளித்த மனு :கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலை அமைப்பதற்கு பதில் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம். தேவைப்படும் இடத்தில் மேம்பாலம் அமைக்கலாம்.இதனால் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் காக்கப்படும். கிணறுகள், தென்னை உள்ளிட்ட மரங்கள் பாதுகாக்கப்படும். புறவழிச் சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதை புறக்கணித்துவிட்டு ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை பலரும் பயன்படுத்துவார்கள்.எனவே நெரிசல் குறையாது. எனவே, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும். ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி