உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செல்வவிநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

செல்வவிநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

வால்பாறை: நடுமலை எஸ்டேட் செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிேஷகம் நாளை(9ம் தேதி) நடக்கிறது. வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் வடக்கு டிவிஷனில் உள்ள துண்டுக்கருப்பராய சுவாமி கோவில் நுழைவுவாயிலில், அமைக்கப்பட்டுள்ள செல்வவிநாயகர் கோவில் மஹா கும்பாபிேஷகம் நாளை (9ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி, இன்று மாலை, 4:00 மணிக்கு நடுமலை தெற்கு விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலாக செல்கின்றனர். மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், சாந்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம், கலசங்கள் புறப்படுகிறது. தொடர்ந்து 9:30 மணிக்கு விமான கலசத்துக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ