உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலவிநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

பாலவிநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம், மூலத்துறை பாலவிநாயகர் கோவில் கும்பாபிேஷக விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். கேரள மாநிலம், மீனாட்சிபுரம் அருகே மூலத்துறை கிராமத்தில், பாலவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகம் விழா, கடந்த, அக்., 31ம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேர் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. அவ்வகையில், நேற்றுமுன்தினம் இறை திருமேனிகளுக்கு எண் வகை மருந்து சாற்றி கருவறையில் நிலைப்படுத்துதல், விமான கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முளைப்பாளிகை வழிபாடு, காப்பு அணிவித்தல், முதற்கால வேள்வி, 108 மூலிகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை; காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 108 மூலிகை வழிபாடு, நாடிசந்தனம், திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றன. காலை, 7:00 மணிக்கு திருக்குடங்கள் உலாவும், 7:15 மணிக்கு கும்பாபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து அன்னதானம், பெரும் திருமஞ்சனம், பதின்மங்களக்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், சுற்றுப்பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை