மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவிலில் வரும் 14ல் கும்பாபிஷேகம்
11-Nov-2024
அன்னுார்; மேற்கு மாணிக்கம்பாளையம், மாசீஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று (5ம் தேதி) நடக்கிறது. மேற்கு மாணிக்கம் பாளையம் மாணிக்க விநாயகர், பாலமுருகன் மற்றும் மங்களநாயகி உடனமர் மாசீஸ்வரசாமி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. குன்னத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.நேற்று காலை கணபதி ஹோமமும், கோபுர கலசம் நிலை நிறுத்துதலும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று (5ம் தேதி) காலை 10:00 மணிக்கு, மங்களநாயகி உடனமர் மாசீஸ்வரசாமி, மாணிக்க விநாயகர், பாலமுருகன் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
11-Nov-2024