உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துக்களுக்காக குரல் கொடுத்தவர் இல.கணேசன்

இந்துக்களுக்காக குரல் கொடுத்தவர் இல.கணேசன்

சோமனூர்; கோவை வடக்கு மாவட்ட அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில், மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம், சோமனூர் செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். பா.ஜ., மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி பேசுகையில், ஆர்.எஸ்.எஸ்., பணியாகட்டும், பா.ஜ., வில் பணியாகட்டும், கவர்னர் பணியாகட்டும் அனைத்திலும் முத்திரை பதித்தவர் இல.கணேசன். அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பால் உயர்ந்தவர். இந்துக்களுக்காக குரல் கொடுத்தவர். இனிமையாக பழகி அனைத்து தரப்பினரின் அன்பை பெற்றவர். தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். அவரின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும், என்றார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் கோபால்சாமி, நகர தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், இந்து இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை