பஸ்சில் நகை திருட்டு கூலி தொழிலாளி கைது
மேட்டுப்பாளையம் : அரசு பஸ்சில் தங்க நகைகளை திருடிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 27. இவர் தனது குடும்பத்துடன் கோவை செல்வபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, அங்கிருந்து அரசு பஸ்சில் மேட்டுப்பாளையம் வந்து கொண்டிருந்தார்.அப்போது தனது மகளுக்கு சட்டை எடுப்பதற்காக பையை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த தங்க நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஐஸ்வர்யா புகார் அளித்தார். மேலும், பஸ்சில் தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி அவர் தொடர்பான தகவலையும் போலீசாருக்கு அளித்தார்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அழகப்பன், 43, கூலி தொழிலாளி தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, 3.5 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.--