உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராணுவ பாதுகாப்பு தொழிற்பூங்காவுக்கு நிலம்: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அவகாசம்

ராணுவ பாதுகாப்பு தொழிற்பூங்காவுக்கு நிலம்: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அவகாசம்

கோவை: சூலுார் வாரப்பட்டி கிராமத்தில் ராணுவ தொழில் பூங்கா, 10.31 ஏக்கரில் பொது, தனியார் கூட்டு முயற்சியில் தயார் நிலை தொழிற்கூடம் அமைக்க, டிட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொழிற்கூடம் அமையும் மொத்த இடத்தில், 10 சதவீதம் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது. இந்த ராணுவ பாதுகாப்பு தொழிற் பூங்காவிற்கான அணுகுபாதை அமைக்க நிலங்கள் தேவைப்படுவதால், கோவை சூலுார் வாரப்பட்டி கிராமத்தில், 19.95 ஹெக்டர் நிலமும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் கே.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 18.25 ஹெக்டர் நிலமும் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கையகப்படுத்த உத்தேசித்துள்ள நிலத்தின் உரிமையாளர்கள், உரிமை கொண்டாடும் நபர்களுக்கு ஆட்சேபனை இருப்பின், கோவை மாவட்ட டிட்கோ தொழிற்பூங்கா சிறப்பு வருவாய் அலுவலரிடம் இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து, 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். இந்த காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் ஆட்சேபணை மற்றும் மறுப்புகள் அல்லது நிலத்தின் மீது கொண் டாடும் உரிமை பாத்தியம் தள்ளுபடி செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் ஆட்சேபனை ஏதேனும் பெறப்படின் அவைகள் மீது கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நவம்பர், 25 தேதி பிற்பகல் 3:00 மணியளவில் விசாரணை செய்யப்படும். அது சமயம், நேரிலோ அல்லது ஆவணச் சான்றுகளையோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி வாய்மொழியாகவோ அல்லது ஆவணச்சான்றுகளையோ ஆட்சேபனைக்கு அடையாளமாக தாக்கல் செய்யலாம் என, கோவை மாவட்ட டிட்கோ தொழிற்பூங்கா சிறப்பு வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை