உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனை விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

மனை விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை: வீட்டு மனை விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி; சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வி.ஐ.பி., சிட்டி ஹவுசிங் அண்ட் புராப்பர்ட்டீஸ் நிறுவனத்தில், வீட்டுமனை வாங்க விண்ணப்பித்தார்.இதற்காக, 45,000 ரூபாய் செலுத்தினார். ஆனால், வீட்டுமனை ஒதுக்கீடு தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே செலுத்திய முன் பணத்தை, திருப்பி கேட்டும் எந்த பதிலும் இல்லை. வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும், பணத்தை தராமல் ஏமாற்றினர்.இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'வீட்டுமனை விற்பனை நிறுவனம், மனுதாரரிடம் பெற்ற முன் பணத்தை திரும்ப வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை