உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதுகாப்பு சட்டம் வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

பாதுகாப்பு சட்டம் வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கோவை; தமிழகத்தில் வக்கீல்கள் தாக்கப்படும் சம்பவத்தை தடுக்க, மத்திய-மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி, கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட தமிழ்நாடு மற்றும் புதுக்சேரி வக்கீல் சங்க கூட்டுநடடிக்கை குழு முடிவு செய்தது.அதன்படி, கோவையில் வக்கீல் சங்கத்தினர், நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 3,000 க்கும் மேற்பட்ட வக்கீல்கள், கோர்ட்டில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை