மேலும் செய்திகள்
'நடிகர்' ஆக மேயர்; 'சீட்' பெற பா.ஜ., 'பிரேயர்'
15-Apr-2025
கோவை; தமிழ்நாடு இலக்கிய பேரவை சார்பில், பேராசிரியர் குழந்தைசாமி, புலவர் பொன்முடி சுப்பையன் ஆகியோர் எழுதிய, 'சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம்' மற்றும் 'கொண்டறங்கிக் கோமான்' ஆகிய நுால்கள் வெளியிட்டு விழா, கோவை பொதுப்பணித்துறை இல்லத்தில் நடந்தது. காந்தி கிராமப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன், தலைமை வகித்தார்.பாரதியார் பல்கலை இயற்பியல்துறை முன்னாள் துறைத்தலைவர் நாராயணதாஸ் பேசுகையில், ''தமிழ் சமுதாயம் எப்படி வளர்ந்து, இந்த நிலைய அடைந்தது என்பதற்கு இந்த நுாலில் நிறைய ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. இந்நுாலை படிக்கும்போது, கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கை மீண்டும் நினைவுக்கு வருகிறது.விவசாய உற்பத்தி பொருட்களை எவ்வாறு, விற்பனை பொருட்களாக மாற்றுவது என்பதை கூட, நுாலாசிரியர்கள் விளக்கி உள்ளனர். சங்ககால தமிழ்ச் சமுதாயம் வளர்ந்த வரலாற்றை அறிய இந்நுால் உதவும்,'' என்றார்.தமிழ்நாடு இலக்கிய பேரவை தலைவர் பொன்முடி சுப்பையன், துணைத்தலைவர் ஜோதிநாதன், பொருளாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
15-Apr-2025