மேலும் செய்திகள்
விலையில்லா பாடபுத்தகங்களை வழங்கல்
03-Jun-2025
அன்னுார்; காட்டம்பட்டி அரசு பள்ளியில், 30 மாணவியருக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. காட்டம்பட்டி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடந்த கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த பசியாற சோறு அமைப்பு சார்பில், நேற்று முன்தினம் இப் பள்ளியில் 30 மாணவ, மாணவியருக்கு முழுமையாக கற்றல் உபகரணங்களை அந்த அமைப்பின் தலைவர் ராஜா சேதுபதி முரளி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளிக்கு உதவிய அமைப்புக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
03-Jun-2025