மேலும் செய்திகள்
இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்
05-Oct-2024
கோவை : கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கீரணத்தம், காந்தி நகரிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சமுதாய நலகூடத்தில், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ் தலைமை தாங்கினார்.சட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், சொத்தில் சம பங்கு உரிமை, குடும்ப வன்முறை சட்டம், சமவேலைக்கு சம ஊதியம், வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள் கீர்த்தனா, அனுசுயா, மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் பிரபு சங்கர், காந்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பங்கேற்றனர்.
05-Oct-2024