உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வானம் கொட்டட்டும்; இனி 5 நாள் மழை

வானம் கொட்டட்டும்; இனி 5 நாள் மழை

கோவை : இன்று முதல் வரும் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என, கோவை, வேளாண் பல்கலையின், வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.கடந்த மாதம் முன்கூட்டியே துவங்கிய வடகிழக்குப் பருவமழை, தமிழகம் முழுதும் பரவலாக பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில், இன்று முதல் வரும் 17ம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்தவரை, லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஓரிரு இடங்களில் 2 மி.மீ., மழை பெய்யக்கூடும்.நாளை, ஆனைமலை, அன்னுார், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு, சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, சூலூர், தொண்டாமுத்தூர் பகுதிகளில், சராசரியாக 7 முதல் 9 மி.மீ, மழை பதிவாகலாம்.வரும் 15ம் தேதி, குறைந்தது 20 மி.மீ., முதல் அதிகபட்சம் 24 மி.மீ., வரை மழை பெய்யலாம். வரும் 16ம் தேதி, குறைந்தபட்சம் 18 மி.மீ., அதிகபட்சம் 22 மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 17ம் தேதி, குறைந்தபட்சம் 18 மி.மீ., மழையும், அதிகபட்சம் 25 மி.மீ., மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் கவனத்துக்கு...

பொதுவாக மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் லேசான தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள், தேவைப்படும் சாகுபடிப் பயிர்களுக்கு உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நெல்லில் குலைநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்து மற்றும் பாசிப்பயறில் கிளைகள் வளரக்கூடும் என்பதால் வெட்டி விடவும். பருத்தியில் வாடல் நோய் மேலாண்மை, மஞ்சளில் கிழங்கு அழுகல் நோய் மேலாண்மை, கொடி வகைக் காய்கறிகளில் பூ பிடித்தலை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை